×

கோவா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கை மேகாலாயாவுக்கு இடமாற்றம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவு!

புதுடெல்லி: கோவா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கை மேகாலாயாவுக்கு இடமாற்றம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.  1965ம் ஆண்டில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய மாலிக், முதன்முதலில் 1980-ல் லோக் தல் கட்சியின் உறுப்பினராக மாநிலங்களவைகுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1986ம் ஆண்டில் காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து 2005ல் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 73 வயதான சத்யபால் மாலிக்  ஜம்மு-காஷ்மீரின் ஆளுநராக பணியாற்றி வந்தாா். அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதையடுத்து கோவா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டாா்.

கடந்த ஆகஸ்ட் 2014 முதல் கோவா ஆளுநராக பதவி வகித்து வந்த மிருதுளா சின்ஹா மாற்றப்பட்டதையடுத்து இவா் அம்மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், கோவா ஆளுநர் சத்யா பால் மாலிக்கை மேகாலயாவுக்கு மாற்றி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து குடியரசுத் தலைவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவா மாநில ஆளுநராக உள்ள சத்ய பால் மாலிக் மேகாலயாவுக்கு இட மாற்றம் செய்யப்பட்டு அம்மாநில ஆளுநராக நியமிக்கப்படுகிறார். மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி தன்னுடைய பணிகளுக்கு இடையே கோவா மாநில ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார். அவர்கள் பதவி ஏற்கும் நாளில் இருந்து இந்த உத்தரவு செல்லுபடியாகும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Satyapal Malik ,Goa ,Meghalaya Goa ,Meghalaya , Goa, Governor Satyapal Malik, Meghalaya, transferred , President
× RELATED கோவையில் தனியார் மருத்துவமனைக்குள்...