×

இந்தியாவுடன் ஒத்துழைப்போம், எப்போதும் இணைந்து பணியாற்றுவோம்; இரு நாட்டு உறவை மேம்படுத்த தயாராக உள்ளோம் : சீனா திடீர் பல்டி!!


பெய்ஜிங் : எல்லைப் பிரச்சனையை தீர்க்க இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. லடாக் எல்லையில் கடந்த ஜூன் 15ம் தேதி இரு நாட்டு ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக இந்தியா - சீனா இடையே மோதல் ஏற்பட்டது. 2 மாதங்களுக்கு மேலாக இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்சனை நீடிக்கிறது. பிரச்சனையை தீர்க்க இரு தரப்பிலும் ராணுவ ரீதியிலும் தூதரக ரீதியிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தொடர்ந்து இதற்கு சீனா ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.

அந்த குற்றசாட்டை தொடர்ந்து சீனா அடியோடு மறுத்துள்ளது. சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் பிரதமர் மோடி உரையாற்றிய போது, பாகிஸ்தான் எல்லை முதல் சீன எல்லை வரை எல்லா இடங்களிலும் இந்தியாவின் இறையாண்மையில் குறிவைப்போருக்கு அவர்களுக்கு புரியும் மொழியிலேயே பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது என்றார். அதனை சீனா கேட்டதாகவும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீனாவின் வெளியுறவுத் துறை  செய்தித் தொடர்பாளர் பேசி இருக்கிறார்.

சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஷோ லிஜியான் செய்தியாளர்களிடம் பேசியபோது, “பிரதமர் மோடியின் உரையை நாங்கள் கவனித்தோம். நாம் இருவருமே நெருக்கமான அண்டை நாடுகள். நீண்டகால நலன் அடிப்படையில் இரு நாடுகளுமே பரஸ்பர மரியாதையையும், ஆதரவையும் கடைப்பிடிப்பதே சிறந்த வழி.நமது பரஸ்பர அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தவும், வேறுபாடுகளை களையவும், நடைமுறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், நீண்டகால அடிப்படையில் இருதரப்பு உறவை பாதுகாக்கவும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Tags : India ,China ,China Baldi , India, Cooperation, China, Balti
× RELATED சொல்லிட்டாங்க…