×

இந்துஸ்தானி இசைக்கலைஞர் பண்டிட் ஜஸ்‌ராஜ் மறைவு

புதுடெல்லி: அமெரிக்காவில் வசித்து வந்த பிரபல இந்துஸ்தானி இசை கலைஞர் பண்டிட் ஜஸ்ராஜ் நேற்று காலமானார். அவருக்கு வயது 90. கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக இசைக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த பண்டிட் ஜஸ்‌ராஜ், அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நேற்று காலை 5.15 மணிக்கு இறந்ததாக அவரது மகள் துர்கா தெரிவித்தார். அவர் பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் உள்ளிட்ட பல தலைவர்களும், இசைத்துறையை சேர்ந்த பல பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அரியானா மாநிலத்தில் 1930ல் பிறந்த பண்டிட் ஜஸ்‌ராஜ் இசைத் துறையில் எண்ணற்ற பல சாதனைகளை படைத்தவர்.

Tags : Pandit Jasraj , Hindustani, musician Pandit Jasraj, deceased
× RELATED பழம்பேரும் இந்தியப் பாடகரான பண்டிட் ஜஸ்ராஜ் அமெரிக்காவில் காலமானார்