முரசொலி மாறனை போல திறமையான நபரை இனி பார்ப்பது அரிதானது: சீத்தாராம் யெச்சூரி புகழாரம்

சென்னை: முரசொலி மாறனை போன்று ஒரு திறமையான நபரை இனி பார்ப்பது அரிதானது  என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசினார். முரசொலி மாறனுடனான எனது நட்பு ஆழமானது. முரசொலி மாறனை பொறுத்தவரை தேசிய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். நாட்டின் நலனுக்கான அவரது பங்களிப்பு அபரிமிதமானது. ஏறத்தாழ 30 ஆண்டு காலம் தேசிய அரசியலில் முன்னணி இடத்தில் இருந்தவர். முரசொலி மாறனை பொறுத்தவரை முடிவுகளை எடுப்பதில் துரிதமாகவும் சாமர்த்தியமாகவும் செயல்படக்கூடியவர். நெருக்கடியான காலகட்டத்தில் சாதுர்யமான முடிவுகளை எடுப்பவராக இருந்தார். வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் தொழில் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்தபோது, தோகா மாநாட்டில் அவர் ஆற்றிய உரையும் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்காக மாற்றியமைத்த ஒப்பந்தமும் என்றும் அவரது புகழை நிலைத்திருக்கச் செய்யும் என்றார்.

Related Stories:

More
>