×

நாடாளுமன்ற வளாக கட்டிடத்தில் தீ விபத்து

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் கூடுகிறது. இந்நிலையில் நேற்று காலை 7.30 மணி அளவில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள துணை கட்டிடத்தின் 6வது மாடியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 7க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அலுவலக கட்டிடத்தில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட சில பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. தீயணைப்பு துறை இயக்குநர் அதூல் கார்ஜ் கூறுகையில், ‘‘மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம்’’ என்றார்.

Tags : Parliament ,complex building ,building , Parliament, campus building, fire accident
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...