×

எந்த டாக்டர்கிட்டயும் அசால்டா பேசலாம்; ஆன்லைன் மருத்துவத்துக்கு அம்புட்டு கிராக்கி

நேர்ல வந்தாத்தான் முடியும். பேஷன்ட பார்த்துதான் மருந்து கொடுக்க முடியும். போன்ல எல்லாம் மருந்து சொல்ல முடியாது என்பது, நாடிபிடித்து பார்க்கும் காலம் தொடங்கி இந்த நவீன யுகம் வரை காலமாக உள்ள நடைமுறை. ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது தற்போது சகஜமாகி விட்டது. ஏன்?… கோர்ட் விசாரணைகள் தீர்ப்புகள் கூட ஆன்லைன் முறைக்கு மாறத்தொடங்கிவிட்டன. ஆனால், மருத்துவத்துறையில் இப்படி ஒரு மாற்றத்தை கொண்டு வந்து விட்டது கொரோனா. ஆன்லைனில் டாக்டரிடம் ஆலோசனை கேட்க தனியாக ஆப்ஸ்கள் கூட வந்து விட்டன. அரசே இதை அங்கீகரித்துள்ளது. ஆன்லைன் இணைய தளங்கள் மூலம் வீடியோ காலில் வந்து டாக்டர்கள் நோயாளியை பார்த்து ஆலோசனை வழங்குகின்றனர். அதிலேயே மருந்து சீட்டும் கொடுத்து விடுகின்றனர்.

இ-மெயில் அல்லது வாட்ஸ்அப்பில் அனுப்பி விடுகின்றனர். அதிலும், படித்த நடுத்தர குடும்பங்களுக்கு இது பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. கொரோனா பரவல் பயத்தில் கிளினிக்குகளுக்கு மக்கள் அதிகம் வருவதில்லை. இதுபோல் பெரிய டாக்டர்களும் மருத்துவமனைகளுக்கு வருவதை தவிர்க்கின்றனர். இவர்களிடம் மருத்துவ ஆலோசனை பெற இந்த ஆன்லைன் முறை பெரிதும் உதவுகிறது என்கின்றனர். ஸ்டெதஸ்கோப் வைத்து பார்க்கவில்லை என்பதுதான் ஒரே குறை. மற்றபடி கொரோனா மருத்துவ துறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்து விட்டது என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

டாக்டர்களிடம் அப்பாயின்ட்மென்ட் பெற உதவும் ஆன்லைன் இணையதளத்தில் உள்ள புள்ளி விவரப்படி கடந்த மார்ச் 1ம் தேதி முதல் மே 31 வரை சுமார் 5 கோடி பேர் இந்த வசதியை பயன்படுத்தியுள்ளார்களாம். காது மூக்கு, தொண்டை அலர்ஜியை கொரோனாவுடன் குழப்பிக் கொண்டதால் இஎன்டி மருத்துவ ஆலோசனை 600%, வீட்டில் இருந்தே வேலையில் சரியாக முறையில் அமராததால் எலும்பு டாக்டர்களிடம் ஆலோசனை 400%, எந்த நேரமும் டிவி, கம்ப்யூட்டர், மொபைல் பார்ப்பதால் கண் மருத்துவ ஆலோசனை 700%, குழந்தைகளுக்கு ஆலோசனை 350%, கொரோனா பொது அறிகுறிகள் காரணமாக பொது மருத்துவரிடம் ஆலோசனை 50% அதிகரித்துள்ளதாம். இதற்கு மேல் என்ன மாற்றம் வேண்டும்.

பிற உடல்நல கோளாறுகள்
* அஜீரணம்
ஒரே இடத்தில் சும்மா அமர்ந்திருப்பதால், அஜீரண கோளாறு ஏற்பட்டு அதுதொடர்பான சிறப்பு மருத்துவரிடம் அதிகமாக ஆலோசனை செய்துள்ளனர்.

* தோல் அழற்சி
மன அழுத்தம் காரணமாக தோல் அழற்சி, முடி உதிர்வு மற்றும் நகங்களில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

* மன நலம்
எதிர்காலம் பற்றிய நிச்சயமற்ற தன்மை, வருவாய் சரிவு, மன அழுத்தம் மற்றும் கொரோனாவால் எதிர்காலம் பற்றிய நிச்சயமற்ற தன்மையால் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : Asalta ,doctor ,Ambuttu , Any doctor can talk to Asalta, online medicine, Ambuttu Kroki
× RELATED பல்வேறு மாநிலங்களில் திருடி...