×

பெங்களூரு கலவரத்தில் தீவிரவாதிகள் கைவரிசையா?

பெங்களூரு: அல் இந்து தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த வாலிபரை டி.ஜே ஹள்ளி கலவரம் தொடர்பாக போலீசார் கைது செய்திருப்பது கலவரத்திற்கு தீவிரவாதிகளின் ஊடுருவல் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் கடந்த 11ம் தேதி நடந்த கலவரத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 380க்கும் அதிகமானவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று புதிதாக கைது செய்யப்பட்ட 40 பேரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

இதற்கிடையில் முன்னதாக கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் சமியூதின் என்ற வாலிபர் அல் இந்து என்ற வங்கதேசத்தை சேர்ந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வங்கதேசத்தை சேர்ந்த இந்த தீவிரவாத அமைப்பு தென் இந்தியாவில் இளைஞர்களை மூளை சலவை செய்து, தங்கள் அமைப்பில் சேர்ப்பது மட்டுமின்றி, வெடி குண்டு விபத்துகளை ஏற்படுவத்துவதிலும் அதிகளவு ஆர்வம் காட்டி வந்தவர்கள். மேலும் இந்து பிரமுகர்களை குறி வைத்து கொலை செய்யும் முயற்சியிலும் இந்த அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக பெங்களூரு சிவாஜிநகரில் நடந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ருத்ரேஷ் கொலை வழக்கிலும் முக்கிய குற்றவாளியாக இருந்துள்ளார். தற்போது இந்த கலவரத்தில் இவர் ஈடுபட்டிருப்பதால், அல் இந்து தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த கலவரத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து சி.சி.பி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தேவைப்பட்டால் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

* குற்றவாளிகளிடமிருந்து வசூலிக்க முடிவு
பெங்களூரு காவிரி இல்லத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்த பின் உள்துறை அமைச்சர் பசவராஜ்பொம்மை கூறும்போது, ‘‘பெங்களூருவில் கடந்த 11ம் தேதி இரவு நடந்த கலவரத்தில் பலரின் சொத்துகள் சேதமடைந்துள்ளது. அதற்கான நஷ்டஈடு கலவரத்திற்கு காரணமாக இருந்தவர்களிடம் இருந்து வசூல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில அரசின் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்படும்’’ என்றார்.

Tags : riots ,extremists ,Bangalore , Bangalore riots, extremists, handcuffs?
× RELATED மணிப்பூர் கலவரத்தில் இறந்தவர்களுக்கு...