×

ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

ஸ்ரீபெரும்புதூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த செங்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார். குடுகுடுப்பைக்காரர். இவரது  மகன் சுதித் (5). நேற்று முன்தினம் செல்வகுமார், படப்பை அடுத்த கரசங்கால் பகுதிக்கு குடுப்பத்துடன் வந்து தங்கினார். பின்னர் துணி துவைக்க செல்வகுமார், மகன் சுதித் மற்றும் உறவினர்கள் 6 பேர் அதே பகுதியில் உள்ள ஏரிக்கு சென்றனர். ஏரியில் குளித்தபோது, அங்கிருந்த சிறுவனை காணவில்லை. அவனை தேடும்போது, தண்ணீரில் சடலமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். புகாரின்படி மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : lake , Lake, drowning, boy killed
× RELATED சிறுவன் சாவு