×

விசிகவினர் உண்ணாவிரத போராட்டம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர். திருக்கழுக்குன்றம் அடுத்த தாழம்பேடு பகுதியில் பொது இடத்தில் பல ஆண்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பம் உள்ளது. கடந்த மாதம், மர்மநபர்கள், அந்த கொடி கம்பத்தை உடைத்து விட்டு சென்றனர். இதனல்,அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைதொடர்ந்து, அதே இடத்தில் மீண்டும் கொடி கம்பம் அமைக்க விடுதலை சிறுத்தை கட்சியினர் முயற்சித்தனர். ஆனால், அப்பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினர், எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை கண்டித்து நேற்று விடுதலை சிறுத்தை கட்சியினர் தாழம்பேடு கிராமத்தில்  உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்தனர். கட்சியின் மண்டல செயலாளர் விடுதலை செழியன் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் பெருமாள், ஒன்றிய செயலாளர் திருமணி சதீஷ், திருக்கழுக்குன்றம் நகர செயலாளர் செந்தில், மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் காசி புதிய ராஜா, நிர்வாகிகள் பாஸ்கர், நாராயணன், வெங்கட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷமிட்டனர். இதையடுத்து, ஏற்கனவே, கொடி கம்பம் இருந்த அதே இடத்தில் கொடியேற்றப்பட்டது.

Tags : Famine, fasting, struggle
× RELATED திருக்குவளை தாசில்தார் அலுவலக...