×

ஆந்திராவில் கோதாவரி வெள்ளப்பெருக்கு தொடர்பாக அதிகாரிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க ஜெகன் மோகன் ரெட்டி அறிவுறுத்தல்

அமராவதி: ஆந்திராவில் கோதாவரி நதியில் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை தொடர்பாக அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய நதிகளில் நீர்வரத்து உயர்ந்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயத்தில் உள்ளன.

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறுகையில், ஆந்திராவில் கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் அதிகாரிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிவாரணம் மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போது மழை பெய்து வரும் கிருஷ்ணா மாவட்டத்திலும் வெள்ள பாதிப்புகள் குறித்து கண்காணிக்கப்பட வேண்டும். இது தொடர்பான அறிக்கைகள் மாநில அரசிற்கு அனுப்ப வேண்டும். நிவாரண முகாம் அமைத்து மக்களை தாழ்வான இடங்களில் இருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அவசர காலங்களில் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களுடன் தொடர்பு கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அத்துடன் விஜயவாடாவில் பிரகசம் தடுப்பணையில் 70 வாயில்கள் திறக்கப்பட்டதால், தாழ்வான பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மாநில நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் முன்னதாக வேண்டுகோள் விடுத்தனர்.Tags : Jagan Mohan Reddy ,floods ,Godavari ,Andhra Pradesh , Andhra, Godavari River
× RELATED ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்...