×

சத்தீஸ்கர் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கிய இளைஞர்...!! மிகுந்த போராட்டத்திற்கு பிறகு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!!!

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அணை ஒன்றில் சிக்கிய இளைஞரை பெரும் போராட்டத்திற்கு பிறகு இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ரத்னாப்பூர் மாவட்டத்தில் குதாகத் என்ற அணை உள்ளது. இதில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக வெள்ளப்பெரு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை அந்த நீர்த்தேக்கத்தில் குதித்த இளைஞர் ஒருவர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார். பின்னர் மரம் ஒன்றினை பிடித்தபடி தொங்கிய அந்த இளைஞர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் உள்ளூர் வாசிகள், காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினரின் நேற்றைய மீட்பு நடவடிக்கை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து இன்று அதிகாலை விமான படையின் எம்.ஐ.,17 ரக ஹெலிகாப்டர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. பெரும் வெள்ளத்திற்கு இடையிலும் லாவகமாக ஹெலிகாப்டரை செலுத்திய விமானப்படை வீரர்கள் வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையில் ஊசலாடிக்கொண்டிருந்த இளைஞரை மீட்டு கரை சேர்த்தனர். இதனையடுத்து இளைஞர் மீட்கப்படும் காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதை தொடர்ந்து, விமானப்படை வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Tags : floods ,Chhattisgarh ,struggle ,Air Force , Chhattisgarh, flood-hit youth, Air Force helicopter, rescue
× RELATED சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!!