×

விருச்சிகம்

27.6.2024 முதல் 3.7.2024 வரை

சாதகங்கள்: ராசிநாதன் செவ்வாய் ஆறில் நிலை கொண்டிருந்தாலும், குரு உங்கள் ராசியைப் பார்வையிடுவது சிறப்பானது. புதன் அஷ்டமத்தில் இருந்து விலகி பாக்கியஸ்தானத்தில் இருப்பதால், மகிழ்ச்சியும் ஆடை ஆபரணச் சேர்க்கையும் உண்டு. பண வசதி நன்றாகவே இருக்கும். செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். நிச்சயதார்த்தம் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான வாய்ப்பு அதிகம். கல்யாணம் ஆகி குழந்தை பிறப்புக்காக காத்திருப்பவர்களுக்கு கிரக நிலைகள் சாதகமாக இருக்கின்றன. சுக்கிரன் அனுகூலமாக இருப்பதால், கலைஞர்களுக்கு வாய்ப்புகளும் வருமானங்களும் கூடும்.

கவனம் தேவை: நான்காமிடத்துச் சனியின் நிலையினால் சில இடர்பாடுகள் இருக்கவே செய்யும். அதை மற்ற கிரக நிலைகளினால் கடந்துவிடலாம். எட்டாம் இடத்தில் சூரியன் இருப்பதால், ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வெளியூர் பயணங்களில் எச்சரிக்கை தேவை. பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். வாகனங்களை ஓட்டும்போது கவனத்தை சிதற விட வேண்டாம்.

பரிகாரம்: ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அருகாமையில் உள்ள முருகன் ஆலயத்திற்குச் செல்லுங்கள். தீபமேற்றி முருகனை மனமார வணங்குங்கள்.

Tags : Scorpio ,
× RELATED விருச்சிகம்