×

விருச்சிகம்

13.6.2024 முதல் 19.6.2024 வரை

சாதகங்கள்: ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு ஆறில் ஆட்சி பெற்று இருக்கின்றார். சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஒரு விதத்தில் நன்மை தரும் அமைப்புதான். காரணம் 12ஆம் இடத்து சுக்கிரன் எட்டில் மறைவது நல்லது தானே. தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. வெளிநாட்டு வியாபாரங்கள் நல்லபடியாக நடக்கும். வீட்டில் சுபகாரிய முயற்சிகள் பலிதமாகும். புதிய ஒப்பந்தங்கள் தொழிலில் கிடைத்து வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு உண்டு. கேது 11ம் இடத்தில் சஞ்சரிப்பதால் தேக ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும். ஆன்மிக உணர்வு அதிகரிக்கும். பெண்களால் நன்மைஉண்டாகும்.

கவனம் தேவை: சூரியன் எட்டாம் இடத்தில் பலம் குறைந்து இருப்பதால், வீண் வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம். தந்தை மகன் கருத்து வேறுபாடுகள் வரும் வாய்ப்புண்டு. தாயாரின் உடல் நலத்தில் அக்கறை தேவை. ஐந்தில் ராகு இருப்பதால், எண்ணங்கள் பூர்த்தியாவதில் பின்னடைவு உண்டு. பொறுமை வேண்டும்.

பரிகாரம்: ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் அருகாமையில் உள்ள முருகன் ஆலயத்திற்குச் செல்லுங்கள். தீபமேற்றி முருகனை மனமார வணங்குங்கள்.

 

 

 

 

 

 

 

 

 

Tags :
× RELATED மீனம்