×

தோனியின் ஜெர்சி நம்பர் 7, என்னுடைய ஜெர்சி நம்பர் 3: ஆக. 15-ல் ஒய்வு அறிவித்தது குறித்து ரெய்னா சுவாரஸ்ய தகவல்

டெல்லி: இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வரும் எம்.எஸ்.தோனி, கடந்த 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்த ஒரு மணி நேரத்துக்குள்ளாக, இந்திய அணி முன்னாள் ஆல் ரவுண்டர் சுரேஷ்  ரெய்னாவும் (33 வயது, முராத்நகர் உ.பி.) தனது ஓய்வு முடிவை அறிவித்து அதிர்ச்சி அளித்தார். தோனி, ரெய்னா இருவரும் ஒரே நாளில் ஓய்வு அறிவித்தது அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தோனி, ரெய்னாவின் முடிவை தொடர்ந்து கிரிக்கெட் பிரபலங்கள் அவர்களின் எதிர்கால வாழ்விற்கு வாழ்த்து தெரிவித்தும் அவர்களுடனான நினைவுகளை பகிர்ந்தும் வருகின்றனர். இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது குறித்து ரெய்னா சில சுவராஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்; தோனி ஓய்வை அறிவிக்க இருப்பதை  முன்பாகவே அவரிடமிருந்து அறிந்துகொண்டேன். தோனியின் ஜெர்சி நம்பர் 7, என்னுடைய ஜெர்சி நம்பர் 3, இரண்டும் சேர்ந்தால் 73. ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியா தனது 73-வது சுதந்திர தினத்தை நிறைவு செய்தது.

இதனால் அன்றே ஓய்வை அறிவிப்பது சிறந்த தருணமாக இருந்தது. மேலும் நானும் தோனியும் ஓய்வு அறிவித்த பின் ண்ட நேரம் கட்டியணைத்து அழுதோம். பியுஷ், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், கர்ன் சாட் ஆகியோர் எங்களின் கிரிக்கெட் வாழ்வைக் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். அன்றிரவு பார்ட்டியும் கொண்டாடினோம் எனவும் கூறினார்.


Tags : Dhoni ,retirement ,Raina , Dhoni, Raina, interesting information
× RELATED எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில்...