×

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லாவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை...: பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதலுக்கு பதிலடி!

பாரமுல்லா: ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா பகுதியில் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில், 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.  ஜம்மு காஷ்மீரின் பரமுல்லா மாவட்டத்தில் உள்ள கிரீரி பகுதியில் இன்று காலை மத்திய ரிசர்வ் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் இணைந்து கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ரிசர்வ் படை வீரர்கள் 2 பேர், ஜம்மு காஷ்மீர் சிறப்பு போலீஸ் அதிகாரி என 3 பேரும் மருத்த்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி மூவரும் வீரமரணமடைந்தனர். இதையடுத்து, துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்த பாதுகாப்பு படையினர், அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த தேடுதல் வேட்டையில் இதுவரை 2 தீரிவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய காஷ்மீர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜய் குமார், லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, அருகிலுள்ள அடர்ந்த பழத்தோட்டங்களில் இருந்து மூன்று தீவிரவாதிகள் வந்து, பாதுகாப்பு படையினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கியுள்ளனர், அதில் எங்கள் மூன்று ஜவான்கள் அதாவது இரண்டு சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் ஜே-கே போலீசார் வீரமரணமடைந்தனர். எல்.ஈ.டி இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிகிறது. விரைவில் அவர்களுக்கு பொருத்தமான பதிலை வழங்குவோம், என தெரிவித்துள்ளார்.


Tags : militants ,attack ,Kashmir ,Jammu ,Baramulla , Jammu and Kashmir, Baramulla, terrorists, security forces, shootings
× RELATED சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி