×

வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே :சென்னையில் டாஸ்மாக் கடைகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியீடு!!

சென்னை: சென்னையில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடபட்டுள்ளன. சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழ் குறைந்ததால், சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அரசு நேற்று வெளியிட்டுள்ளார் அறிக்கையில்,  சென்னை மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட மேலாளர்கள் அலுவசென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த மதுபான சில்லறை விற்பனை கடைகள் நாளை (ஆக.18) முதல் இயங்கும்.

மேலும், மால்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் மதுபானக்கடைகள் இயங்காது. மதுபான கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை சென்னை மாநகரில் 800 கடைகள் உள்ளது. இதில், நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ள 700 கடைகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் டாஸ்மாக் கடைகள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.   

அதில் இடம்பெற்றுள்ள 14 வழிமுறைகள்..

1.கடையின் கிரில் பகுதிக்கு வெளிப்படையான நெகிழி (Transparent Sheet)விற்பனை கவுன்ட்டர் தவிர்த்து பொருத்தப்படவேண்டும்.
2.தடுப்பு அமைத்து அதன் அளவு விவரம் குறிப்பிடவும்.மதுபான கடைகளுக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் மற்றும் தனி மனித இடைவெளி கண்டிப்பாக கடைப்பிடித்தல் வேண்டும் .
3.வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்க வேண்டும்.
4.சாமியானா பந்தல் மற்றும் மைக் செட் ஏற்பாடு செய்ய வேண்டும்.
5. வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்க குறைந்தது 3 அடி இடைவெளி விட்டு 50 வட்டங்கள் வண்ணத்தினால் அல்லது பிளீச்சிங் பவுடரால் அமைக்கவும். தடுப்பு சுவர் அமைத்தும் வண்ணத்தினால் 3 அடி இடைவெளியில் வட்டங்கள் அமைத்தும் கடை எண்ணுடன் மாவட்ட மேலாளருக்கு புகைப்படம் அனுப்பவும். மாவட்ட மேலாளரின் ஒப்புதல் பெற்ற பின்னரே கடை திறக்கப்பட வேண்டும்.
6.தன்னார்வலர்கள் அல்லது மதுக்கடை ஊழியர்கள் 5 பேரை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பயன்படுத்தி கொள்ளவும்.
7.கடையில் போதிய இடம் இருப்பின் 2 கவுன்ட்டர்களை அமைத்துக்கொள்ளவும்.
8.தேவைப்படும்போதெல்லாம் கடையின் சுற்றுபுறம் பிளீச்சிங் பவுடர் தெளித்து சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.
9.குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.
10.இரு நபர்களுக்கு இடையில் சமூக இடைவெளி குறைந்தது 3 அடி இருக்க வேண்டும்.
11.அனைத்து வாடிக்கையாளர்களும் சானிடைசரால் சுத்தம் செய்த பின்னரே கவுன்டரில் அனுமதிக்க வேண்டும்.
12.கடைப்பணியாளர்கள் தற்போது வழங்கிய காட்டன் கையுறை, மாஸ்க் மற்றும் Face Shield அணிந்து பணிபுரிய வேண்டும்.
13.அனைத்து பணிகளையும் முடித்து பிற்பகல் 3.00 மணிக்குள் கடையின் சுற்றுபுறத்தை தூய்மை செய்ய வேண்டும்.மதுபான கடைகளில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும் உத்தரவிடப்படுகிறது.
14.மேற்காணும் பணிகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்படும். தவறும்பட்சத்தில் கடைகள் திறக்கப்படமாட்டது.

Tags : customers ,stores ,Tasmac ,Chennai , Customers, 500 Tokens, Archives, Tasmac, Stores, Guidelines, Ethics
× RELATED கேரளாவில் மயோனைஸ் சாப்பிட்ட 70...