×

நாட்டிற்காக 3 சாம்பியன்ஷிப்களை வென்ற ஒரே ‘கூல் கேப்டன்’ தோனியின் பெயர் நினைவில் இருக்கும்: இபிஎஸ், ஓபிஎஸ் புகழாரம்

சென்னை: நாட்டிற்காக 3 சாம்பியன்ஷிப்களை வென்ற ஒரே ‘கூல் கேப்டன்’ தோனியின் பெயர் நினைவில் இருக்கும் என்று இபிஎஸ், ஓபிஎஸ் புகழாராம் சூட்டியுள்ளனர். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும். 331 சர்வதேச போட்டிகளில் இந்தியாவை வழிநடத்திய டோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்காக 3 சாம்பியன்ஷிப்களை வென்ற ஒரே ‘கூல் கேப்டன்’ தோனியின் பெயர் நினைவில் இருக்கும். மேலும், இதுகுறித்து துணை முதல்வர் ஓபிஎஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தோனி கடுமையான உழைப்பு மற்றும் சுயதிறன் மூலம் கிரிக்கெட்டில் உச்சம் தொட்டவர். அவர், பாதகமான சூழலை சாதகமாக மாற்றுபவர் கேப்டன் கூல் தோனி. அவர் எப்போதும் மக்கள் மனதில் நிறைந்து இருப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : OBS ,Dhoni ,country ,championships ,Cool Captain , Dhoni is the only ‘Cool Captain’ to win 3 championships for the country, name, EPS, OBS, fame
× RELATED தோனியுடன் இணைந்து ஆட்டத்தை முடித்தது...