×

மழைக்கால கூட்டத் தொடரை நடத்த நாடாளுமன்றத்தில் தீவிர ஏற்பாடு

புதுடெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 23ம் தேதி தேதி குறிப்பிடப்பிடப்படாமல் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில், நோய் பரவல் அச்சுறுத்தல்களுக்கு இடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இந்த மாத இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் கூடுகிறது. இதற்கான ஏற்பாடுகள் பற்றி கடந்த ஜூலை 17ம் தேதி மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் சந்தித்து பேசினர். அப்போது, சமூக இடைவெளிக்காக இரு அவைகளின் அரங்குகள், பார்வையாளர் மாடங்களை (கேலரி) பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், கூட்டத் தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநிலங்களவை, மக்களவை செயலாளர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர். இதில், நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
 
* இதற்கு முன் ஒரே நேரத்தில் இரு அவைகளின் கூட்டமும் தனித்தனி, அவைகளில்தான் நடக்கும். இம்முறை அசாதாரண சூழ்நிலையால், காலையில் ஒரு அவையும், பிற்பகலில் ஒரு அவையையும் நடத்தப்படுகிறது.
* கூட்டம் நடக்கும்போது, சமூக இடைவெளி விட்டு எம்பி.க்கள் அமர்வதற்காக இருக்கைகள் மாற்றி அமைக்கப்படுகின்றன.
* மாநிலங்களவை கூட்டம் நடக்கும்போது, கூடுதலாக மக்களவையின் அரங்கும் பயன்படுத்தப்படும். மேலும், பார்வையாளர்கள் மாடத்திலும் எம்பி.க்கள் அமர வைக்கப்படுவார்கள்.
* மாநிலங்களவை அரங்கில் 50 எம்பி.க்களும், இதன் பார்வையாளர் மடங்களில் 51 எம்பி.க்களும் அமர்வார்கள். மீதமுள்ள 132 எம்பி.க்கள் மக்களவையில் அமருவார்கள்.  
* அதேபோல், மக்களவை நடக்கும்போது, மாநிலங்களவையும், அதன் பார்வையாளர்கள் மாடங்களும் எம்பி.க்கள் அமர பயன்படுத்தப்படும்.
* 1952ம் ஆண்டில் இருந்து நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், முதல் முறையாக இதுபோன்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* பார்வையாளர் மாடங்களில் அமரும் எம்பி.க்கள், அவை நடவடிக்கைகளை பார்த்து பங்கேற்பதற்காக, அவர்களின் முன்பாக மிகப்பெரிய காட்சி திரைகள் அமைக்கப்படுகிறது.
* இரு அவைகளிலும் புற ஊதாக்கதிர்கள் மூலமாக வைரஸ் ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.
* எம்பி.க்களுக்கு இடையே பாலிகார்ப்பனேட் தடுப்புக்கள் அமைக்கப்படும்.கூட்டத்தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இம்மாதம் மூன்றாவது வாரத்திற்குள் முடிக்கும்படி அதிகாரிகளுக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார். இந்த ஏற்பாடுகளை செய்யும் பணியில், இரு அவைகளின் செயலாளர்களும் கடந்த இருவாரங்களாக மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags : Parliament ,spring meetings , Rainy season, meeting series, in parliament, intensive arrangement
× RELATED இந்தியா அமல்படுத்தியுள்ள...