பூக்கடை ஏசிக்கு 2வது முறையாக கொரோனா

சென்னை: சென்னை பூக்கடை உதவி கமிஷனருக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளத. சென்னை தலைமை செயலகம் பூக்கடை உதவி கமிஷனர் கட்டுப்பாட்டில் வருகிறது. இதனால் சுதந்திர தின பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அனைத்து போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பூக்கடை உதவி கமிஷனர் பாலகிருஷ்ணபிரபுவுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து உதவி கமிஷனர் கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிடியூட் கொரோனா மையத்தில் சிகிச்சைக்காக அனுதிக்கப்பட்டுள்ளார்.

உதவி கமிஷனர் உட்பட மாநகரில் 17 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. உதவி கமிஷனர் கடந்த மாதம் தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார். பிறகு சில தினங்களுக்கு முன்பு தான் உதவி கமிஷனர் பாலகிருஷ்ணபிரபு மீண்டும் பணியில் சேர்ந்தார். இந்நிலையில் உதவி கமிஷனருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், தொற்றால் குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பிய போலீசார் கடும் அச்சமடைந்துள்ளனர்.

Related Stories:

>