இந்தியாவில் முகநூல் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய செயலிகளை பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்தியுள்ளதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு...!!!

டெல்லி: இந்தியாவில் முகநூல் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய செயலிகளை பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு; அவர்கள் போலியான செய்தியை பரப்பி, அதன் வழியே வெறுப்புணர்வை தூண்டுகிறார்கள்.  தேர்தலில் அதனை பயன்படுத்தி செல்வாக்கை பெற முயற்சிக்கின்றனர்.  இறுதியாக அமெரிக்க ஊடகம், முகநூலின் உண்மை பற்றி வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது என தெரிவித்து உள்ளார். மேலும் அவர் கூறியதாவது: சமூக ஊடகங்களில் வெளியிடும் செய்திகளை திரித்து கூறும் வேலைகளில் பா.ஜ.க. ஈடுபடுகிறது என்ற காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு சான்றாக, அமெரிக்காவில் இருந்து வெளிவரும் தி வால் ஸ்டிரீட் ஜர்னல் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியை கவனியுங்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும், வெறுப்பு பேச்சுகளுக்கான முகநூலின் விதிகள் இந்திய அரசியலில் வேறுபடுகிறது என்ற வகையில் தகவல்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.  ஆளும் பா.ஜ.க.வின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் வெறுப்பு பேச்சுகள் மற்றும் ஆட்சேபனைக்குரிய பதிவுகளை நீக்குவதில் முகநூல் பாரபட்சம் காட்டுகிறது. முகநூல் நிறுவனத்தின் செயல் அதிகாரி ஒருவர், சர்ச்சைக்குரிய அரசியல்வாதிக்கு தடை விதிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். பா.ஜ.க. தொண்டர்களின் அத்துமீறல்களை தண்டிப்பது, இந்தியாவில் முகநூல் நிறுவனத்தின் வர்த்தக நலனில் பாதிப்பு ஏற்படுத்தும் என கூறியுள்ளார் என்று அமெரிக்க ஊடக தகவல் தெரிவிக்கின்றது. இதேபோன்று, அந்நிறுவனத்தின் நடப்பு மற்றும் முன்னாள் பணியாளர்களை குறிப்பிட்டு, பா.ஜ.க.வுக்கு ஆதரவான முறையிலான அம்சங்களை முகநூல் நிறுவனம் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>