×

நாட்டின் முதல் முறையாக கைதிகளுக்கான சிறப்பு கோவிட் பராமரிப்பு மையம்: புழல் சிறையில் திறப்பு

சென்னை: இந்தியாவிலேயே முதல் முறையாக கைதிகளுக்கான சிறப்பு கோவிட் மையம் புழல் சிறைசாலையில் திறக்கப்பட்டு உள்ளது.
சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனை பிரிவு, விசாரணை பிரிவு, மகளிர் சிறை என 3 சிறைகளில் 2000-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண் கைதிகளுக்கு சிகிச்சை அளிக்க 3 வார்டுகள், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் கைதி
களுக்கு சிகிச்சை அளிக்க 1 வார்டு என மொத்தம் 50 படுக்கைகள் கொண்ட கொரோனா பராமரிப்பு மையம் தண்டனை பிரிவில்  ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையத்தினை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று மாலை  திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்காக இதுவரை புதியதாக 1,29,122 படுக்கை வசதிகள் உள்ளது. தமிழகத்தில் 1,643 கோவிட் பராமரிப்பு மையங்கள் செயல்படுகின்றன. சென்னையில் மட்டும் 54 கோவிட் பராமரிப்பு மையங்கள் செயல்படுகிறது.  இந்தியாவிலேயே முதல்முறையாக கைதிகளுக்காக புழல் சிறையில் சிறப்பு கோவிட் பராமரிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது. புழல் சிறையில் ஆய்வகம், மருந்தகம், 108 ஆம்புலன்ஸ் சேவை என அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவார்கள். புழல் சிறையில் 114 கைதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 99 பேர் இதுவரை குணமடைந்துள்ளதுள்ளனர்  என்றார்.



Tags : time ,Special Govt Care Center for Prisoners ,Opening ,country , Special Govt Care Center, Phuhl Jail
× RELATED வரலாற்றில் முதன்முறையாக ரூ.50,000ஐ தொட்ட...