×

பக்ரைனுக்கு விமானம் செல்ல ஏற்பாடு: வைகோவிடம் உறுதி

சென்னை: மதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: பக்ரைனை சேர்ந்த 800க்கும் மேற்பட்டவர்கள், சென்னையில் இருக்கின்றனர். இவர்கள் பக்ரைன் திரும்ப விமானம் இல்லை. இதுகுறித்து, பக்ரைன் வாழ் தமிழர்கள் விடுத்த வேண்டுகோளை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆகியோருக்கு விமானம் இயக்குமாறு மின்னஞ்சல் வழியாக தெரிவித்து இருந்தார். இதையடுத்து, வைகோவிடம் அலை பேசியில் பேசிய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி விரைவில், பக்ரைன் நாட்டுக்கு விமானம் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.


Tags : Vaiko ,Bahrain , Bahrain, Flight, Vaiko
× RELATED சுயேச்சை சின்னத்திலேயே போட்டியிட...