×

சத்தியமங்கலம் பகுதியில் சூரியனைச்சுற்றி கருப்பு நிறத்துடன் வட்டம்

சத்தியமங்கலம்:  சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. லேசான வெயில்  அடித்தபோதும் வெப்பத்தின் தாக்கத்தை உணர முடியவில்லை. இந்நிலையில் நேற்று மதியம் வானில் சூரியனைச் சுற்றி லேசாக கருப்பு நிறத்துடன்  வட்டம் தென்பட்டது. சூரியனைச் சுற்றி ஏற்பட்ட வட்டத்தை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். வட்டத்திற்கான காரணம் என்னவென்று  தெரியாத நிலையில், பொதுமக்கள் வானத்தில் ஏற்பட்ட வட்டத்தை ஆச்சரியத்துடன் பார்த்தனர். மேலும் ஏதாவது கிரகணம் நிகழுமா? எனவும்  பொதுமக்கள் பேசிக் கொண்டனர். சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, பவானிசாகர், தாளவாடி, ஆசனூர் மற்றும் கடம்பூர் பகுதிகளில் சுமார் 2 மணி  நேரம் இந்த வட்டம் வானில் தோன்றி மறைந்தது.Tags : area ,Satyamangalam , Satyamangalam, sun, black circle
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தை திருச்சி...