×

கோடிக்கணக்கில் வெளிநாட்டு பணம் பதுக்கல்: சொப்னா மீது என்ஐஏ சந்தேகம்

திருவனந்தபுரம்: கேரள  தங்கம் கடத்தல் வழக்கில் கைதாகி உள்ள சொப்னா கோடி கணக்கான வெளிநாட்டு   பணத்தை பதுக்கி வைத்து இருக்கலாம்  என்ற சந்தேகம் என்ஐஏ.வுக்கு  எழுந்துள்ளதால் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. திருவனந்தபுரம்  ஐக்கிய அரபு   அமீரக தூதரக  அதிகாரிகளிடம் தனக்கு இருந்த செல்வாக்கை  பயன்படுத்தி சொப்னா தமிழகம், ஆந்திரா, தெலங்கானா,   கர்நாடக மாநில விமான  நிலையங்கள்  வழியாகவும் தங்கத்தை கடத்தி வந்து  உள்ளார். அதன்படி,  கடந்த 2018 முதல் பெங்களூரு, ஐதராபாத் விமான  நிலையங்கள் வழியாக ஏராளமான   பார்சல்களை அனுப்பி  வைத்துள்ளார். பின்னர் அவற்றை  வாகனங்களில் ஏற்றி  கேரளாவுக்கு  கொண்டு சென்றுள்ளார். இந்த பார்சல்களில்   பெருமளவு தங்கம்  இருந்திருக்கலாம்  என்ற சந்தேகம் சுங்க இலாகாவினருக்கு  ஏற்பட்டுள்ளது.  

கர்நாடகா, ஆந்திரா மாநில  அரசியல்வாதிகளுடனும் இவருக்கு நட்பு  இருந்துள்ளது.  பெங்களூரு,  ஐதராபாத்தில் இருந்து  வாகனங்களில் கொண்டு  வந்த பார்சல்களை திருவனந்தபுரம்,  மலப்புரத்தில் உள்ள  சில ரகசிய இடங்களுக்கு கொண்டு சென்றதும்   தெரியவந்துள்ளது. இது தொடர்பாக  சுங்க  இலாகா, என்ஐஏ தீவிர விசாரணை  நடத்தி  வருகிறது. கொரோனா  பிரச்னையால்  வெளிநாடுகளில் சிக்கியவர்களை மீட்க, மத்திய அரசு  வந்தே  பாரத்  திட்டத்தை  செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் வளைகுடா நாடுகளில் இருந்து  கேரளாவுக்கு   மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர்  வந்துள்ளனர்.  கேரளாவுக்கு வரும்   விமானங்கள் திரும்பி செல்லும்போது இங்கு சிக்கிய  வெளிநாட்டினரை  அழைத்து  செல்வது உண்டு. இப்படி  செல்பவர்கள் மூலம் சொப்னா 10 கோடிக்கும்  ேமல்  வெளிநாட்டு பணத்ைத கடத்தி உள்ளார்.

சொப்னாவின்  வங்கி லாக்கரை   பரிசோதித்த போது 8,034 அமெரிக்க டாலர், 711 ஓமன்  ரியால்கள் சிக்கின.  கோடி கணக்கில் வெளி நாட்டு  பணத்தை சொப்னா கடத்துவதாக   ஏற்கனவே என்ஐஏ  விசாரணையில் தெரியவந்தது. ஆனால், லாக்கரில் குறைந்தளவே   ெவளிநாட்டு பணம்   இருந்துள்ளது. ஆகவே, கோடிக்கணக்கான பணத்தை எங்காவது  பதுக்கி வைத்து  இருக்கலாமோ? என்ற சந்தேகம் என்ஐஏ, சுங்க
  இலாகாவுக்கு  எழுந்துள்ளது. இது  தொடர்பாக விசாரித்த போது சொப்னா எந்த தகவலையும்  கூறவில்லை . இதற்கிடையே தங்கம் கடத்தல்   வழக்கில்  என்ஐஏ நேற்று முன்தினம் மேலும்  4 பேரை ‘உபா’ சட்டத்தில் கைது   செய்து உள்ளது.  இதையடுத்து, இந்த வழக்கில்   ைகதானவர்களின் எண்ணிக்கை 20 ஆக   உயர்ந்து உள்ளது.

8 பைகளில்...
துபாயை  சேர்ந்த 5  பேருக்கு கடந்த ஜூன் மாதம் திருவனந்தபுரம் தூதரகத்தில் இருந்து  டிக்கெட்  வாங்கப்பட்டு உள்ளது.  சொப்னாவின் சிபாரிசின்  பேரிலேயே டிக்கெட்   கொடுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மொத்தம் 8 பைகளை கொண்டு சென்று   உள்ளனர். இவற்றில் கோடிக்கணக்கில்  வெளிநாட்டு பணம்  இருந்திருக்கலாம் என்று   என்ஐஏ கருதுகிறது. இது தொடர்பாக தூதரக அதிகாரிகள்,  திருவனந்தபுரம்  விமான நிலைய  அதிகாரிகளை விசாரிக்க  என்ஐஏ முடிவு செய்து  உள்ளது.  திருவனந்தபுரம் மட்டுமல்லாமல்  சென்னை, ஐதராபாத், கொச்சி ஆகிய  இடங்களில்   இருந்தும் திரும்பி சென்ற வந்தே  பாரத் விமானங்கள் மூலமும்  வெளிநாட்டு பணம்  கடத்தப்பட்டு இருக்கலாம்? என்று  என்ஐஏ கருதுகிறது.

சிவசங்கரிடம் அமலாக்கத்துறை விசாரணை
ஐஏஎஸ்  அதிகாரி சிவசங்கரிடம் விசாரணை நடத்தவேண்டும் என்று கூறி கொச்சி பொருளாதார  குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை  சார்பில் மனு தாக்கல்  செய்யப்பட்டது. அவரிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது.  இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு  சிவசங்கருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்  அனுப்பியது. நேற்று கொச்சியில் அமலாக்கத்துறை அலுலகத்தில் அவர் ஆஜரானார்.  பல மணி நேரம்  விசாரணை நடந்தது. ஏற்கனவே சொப்னா, சந்தீப் நாயர் மற்றும்  சரத்குமாரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.   நேற்று சிவசங்கரிடம் இவர்கள் முன்னிலையில் விசாரணை நடந்தது.

Tags : NIA ,Millions , Foreign Money, Sopna, NIA, Suspicion
× RELATED பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு...