×

பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து தாமிரபரணி ஆற்றில் நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை: திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றின் வாய்க்கால்களில் இருந்து நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் உள்ள 11 வாய்க்கால்களில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் திறக்க முதல்வர் பழனிசாமி ஆணையிட்டுள்ளார். குடிநீர் மற்றும் இதர பயன்பாட்டிற்காக ஆகஸ்ட் 18 முதல் 31 வரை 1,693.44 மி.கன அடி நீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதுபோன்று, மேட்டூர் அணையிலிருந்து வரும் 18 ஆம் தேதி முதல் புள்ளம்பாடி, புதிய கட்டளைமேட்டு கால்வாய்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வரும் 18 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 வரை 136 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தண்ணீர் திறப்பின் மூலம் திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் போன்ற மாவட்டங்களில் 42,736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெற கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Palanisamy ,reservoirs ,river ,Papanasam ,Tamiraparani ,opening , Papanasam, Chervalaru, Manimuttaru, Tamiraparani, Chief Minister Palanisamy
× RELATED கோடையில் குடிநீருக்கு சிக்கல் இல்லை...