×

ஊரடங்கு முடியும்வரை உயர்அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகளிடம் குறைந்தபட்ச கட்டணத்தை வசூலிக்க வேண்டும்

* தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொரோனா ஊரடங்கு முடியும் வரை உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் குறைந்தபட்ச மின் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று தமிழக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய ஸ்பின்னிங் மில் அசோசியேசன் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் கூறியிருப்பதாவது:  கொரோனா ஊரடங்கு காரணமாக மூன்று மாதங்களுக்கு மேலாக அனைத்து மில்களும் மூடப்பட்டு உள்ளன. வேலைக்கு தொழிலாளர்கள் வருவதில்லை. பொருளாதார ரீதியில் அனைத்து நிதி நடவடிக்கைகளும் முடங்கிப்போய் உள்ளது.  ஆனால் தமிழ்நாடு மின்வாரியம் உயர் அழுத்த மின் கட்டணத்தை முழுமையாக செலுத்தும் படி நிர்பந்திக்கிறது.

எனவே உயர் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் தொழிற்சாலைகளிடம் முழு மின் கட்டணத்தையும் வசூலிக்க தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தடை விதிக்க வேண்டும், குறைந்த பட்ச உயர்மின் அழுத்தத்திற்கான 20 சதவீதத்தை மட்டும் கட்ட அனுமதியளித்து உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.  இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘உயர் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் ஸ்பின்னிங் மில் ஆலைகள் மற்றும் வழக்கு தொடர்ந்துள்ள மற்ற தொழிற்நிறுவனங்களிடமிருந்து, 20% கட்டணத்தை மட்டுமே தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வசூலிக்க வேண்டும்.  

கூடுதலாக வசூலித்து இருந்தால் வரும் காலங்களில் உள்ள மின் கட்டணத்தில் சரிபடுத்திக்கொள்ள வேண்டும். ஊரடங்கு முடியும் வரை இந்த உத்தரவு பொருந்தும். மில் அலுவலகங்களில் மற்ற நிர்வாக பயன்பாட்டிற்கான மின் கட்டணத்திற்கு இந்த உத்தரவு பொருந்தாது’ என்று உத்தரவிட்டுள்ளார்.



Tags : Factories ,end , Curfew, High Pressure Electricity, Tamil Nadu Distribution Corporation, Chennai High Court
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...