×

தீவிரவாதிகள் தாக்குதலில் 2 போலீசார் பலி

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் நவ்காம் பகுதியில் போலீசார் நேற்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் போலீசார் மீது திடீரென தாக்குதல் நடத்தினார்கள். இந்த திடீர் தாக்குதலில் 2 போலீசார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 போலீசார் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பி சென்றனர். சுதந்திரதினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்த நிலையில் தீவிரவாதிகளின் இந்த தாக்குதல் நடந்துள்ளது.


Tags : policemen ,Terrorist attack , Terrorist , 2 policemen
× RELATED காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 2 வீரர்கள் பலி