×

இன்னும் ஒரு வருஷத்துக்கு ஆள விடுங்க சாமி முக்கால்வாசி பேருக்கு வீடுதான் கதி ஆபீசுக்கு வர மனசே இல்லையாம்

வீ ட்டில் இருந்தே வேலை என்பது, ஊரடங்கில் பலருக்கு பழகிப்போய்விட்டது. முதலில் இந்த வழக்கத்தை ஆரம்பித்து வைத்தவை ஐடி நிறுவனங்கள்தான். அதன்பிறகு பல்வேறு துறைகளும் இதை கடைப்பிடிக்க தொடங்கி விட்டன. வீட்டில் இருந்து வேலை வசதியாக இருந்தாலும், ஆபீஸ் சூழல் வரவே வராதுதான்.  இருப்பினும், இதுபற்றி மக்களின் மனநிலையை அறிய ஒரு சர்வே நடத்தப்பட்டது. 15 துறைகளை சேர்ந்த 550 நிறுவன ஊழியர்களிடம் இந்த ஆய்வு நடந்தது. ஐடி நிறுவனங்கள், ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், ஆட்ேடாமொபைல் துறை, வங்கி துறை ஆகியவை இதில் அடங்கும்.  அதில், வீட்டில் இருந்தே வேலை பார்த்து சொகுசு பழகிப்போன பலர், ஸ்கூலுக்கு போக மறுக்கும் குழந்தை மாதிரி அடம்பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அதாவது, சர்வேயில் 10ல் 3 பேர்தான் ஆபீஸ் போக விருப்பம் தெரிவித்துள்ளனர். மற்றவர்கள் ‘‘இன்னும் ஒரு வருஷத்துக்கு வூட்லயே இருந்துக்குறோம்’’ என்று கூறியுள்ளனர்.
 ஆனால், பல நிறுவனங்கள், இதெல்லாம் சரிப்பட்டு வராது. ரிமோட்ல வேலை பார்க்கிறேன் பேர்வழின்னு, ரிமோட்டும் கையுமா சீரியல் பார்கறதெல்லாம் எங்களுக்கும் தெரியும். வேலைக்கு வரப்பாருங்க என சில நிறுவனங்கள் ெகடுபிடி காட்ட துவங்கி விட்டன. இப்போதைக்கு எல்லாரும் வர முடியாதுதான். 30 சதவீதம் பேராவது வர வேண்டும் என்று நிறுவனங்கள் கூறியும், 20 சதவீதத்துக்கும் குறைவானவர்கள்தான் ஆபீஸ் வர விரும்புகிறார்களாம். சில நிறுவனங்கள், வேலை நடந்தால் போதும் என்ற எண்ணத்தில் ஊழியர்கள் விருப்பத்துக்கே விட்டு விட்டன.

* வீட்டில் இருக்க விருப்பம் ஐடி நிறுவனங்கள் ஆலோசனை நிறுவனங்கள் வங்கி துறை காப்பீட்டு துறை
* வேலைக்கு வர விருப்பம் ஆட்டோமொபைல் சரக்கு போக்குவரத்து தொழில்நுட்பத்துறை உற்பத்தி துறை



Tags : Sami ,office ,Kathi ,house , Chennai, Corona, curfew, TN
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...