×

தங்க கடத்தல் வழக்கு: கேரளாவில் உள்ள 6 இடங்களில் கைது செய்யப்பட்ட 4 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை...!!

திருவனந்தபுரம்: கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த கடத்தலில் கேரள தகவல் தொடர்பு துறையில் மேலாளராக பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் - க்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக, இவர் அமீரக நாட்டு தூதரகத்தில் பணியாற்றியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.  மேலும் தலைமறைவாக இருந்த அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் இந்த வழக்கில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனின் தலைமை செயலர் எம். சிவசங்கர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.  தொடர்ந்து வழக்கு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பின்னர் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது 150 கிலோ தங்கத்திற்கு மேல் கடத்தி வரப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.  இதனை தொடர்ந்து அமலாக்கத்துறையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தியது.

இந்நிலையில், இந்த வழக்கில் முகமது அன்வர், ஹம்சத் அப்துல் சலாம், சம்ஜு மற்றும் அம்ஜத் அலி ஆகிய 4 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். கேரளாவின் மலப்புரம் மற்றும் கோழிக்கோடு நகரங்களில் உள்ள 6 இடங்களில், கைது செய்யப்பட்ட 4 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தியனர்.  இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன என கூறப்படுகிறது.  இதுவரை இந்த வழக்கில் 20 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Tags : places ,NIA raids homes ,Kerala Authorities , Gold smuggling, case, Kerala, NIA
× RELATED தங்கம் கடத்தல் வழக்கு சொப்னா, சிவசங்கருக்கு 5 நாள் போலீஸ் காவல்