×

சுற்றுச்சூழல் தாக்க வரைவு குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு...!!!

சென்னை: மத்திய அரசு ஒப்புதல் அளித்த சுற்றுச்சூழல் தாக்க வரைவு குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை-2020- க்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் இந்த வரைவு அறிவிக்கையைக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இந்த வரைவு அறிவிக்கை பல்வேறு திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் முறைகளைக் கொண்டுள்ளது. இதற்கு பரவலாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்நிலையில் சுற்றுச்சூழல்தாக்க வரைவு குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ள்து. இதில் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் 12 பேர் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர், பொதுப்பணித்துறை தலைமை செயலாளர் உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம்பிடித்துள்ளனர்.

Tags : Government ,committee ,Tamil Nadu , Environmental Impact Draft, Study, Committee, Government of Tamil Nadu
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...