×

ஆஸி. பிரதமர் ஸ்காட் மோரிசன் சுதந்திர தின வாழ்த்து: ஆஸ்திரேலியாவின் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு அளவில்லாதது என நெகிழ்ச்சி..!!

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவின் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு அளவில்லாதது எனவும்,
இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் தாங்களும் முழு மனதுடன் இணைவதாகவும்
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டில் 74வது
சுதந்திரத்தினத்தையொட்டி ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் வெளியிட்டுள்ள வாழ்த்து
செய்தியில், தங்களது நீண்ட கால நட்பு நாடான இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டத்தில்
முழு மனதுடன் இணைவதாக குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்கள், திறமையான தொழியாளர்கள் என ஆஸ்திரேலியாவின் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு மிக அதிகம் எனவும், இந்திய மக்களுக்கு தனது அன்பான சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் ஸ்காட் மோரிசன் குறிப்பிட்டுள்ளார்.  மேலும் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான நட்பு என்பது நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மற்றும் சாதூரி தன்மையை கடந்தது. இது ஆழமான நட்பு, மரியாதை மற்றும் நம்பிக்கையால் நிறுவப்பட்டது.

இவற்றில் ஜனநாயகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்டவை அடங்கும். இந்தியாவுடன் நீண்ட கால நண்பராக இருக்கும் ஆஸ்திரேலியா, இந்தியாவில் சுதந்திரத் தின கொண்டாட்டத்தில் இணைகிறது. இந்திய மக்களுக்கு எங்களின் சுதந்திர தின நல்வாழ்த்துகள். எங்களது மிகப்பெரிய பலமாக இந்தியாவிலிருந்து வந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விளங்குகிறார்கள். அவர்கள் எங்களது நாட்டை பன்முக கலாச்சார நாடாக மாறியதற்கு பெரும் பங்கை ஆற்றியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Scott Morrison ,Independence Day ,Aussie ,Indians ,Australia ,India , Australian PM Scott Morrison, India, Independence
× RELATED ஆஸி. தொடர் சுவாரஸ்யங்கள் நிறைந்ததாக இருக்கும்: பும்ரா சொல்கிறார்