×

கல்லூரி சேர்க்கை பணிகளுக்காக செல்லும் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் காட்டினாலே போதும்; இ-பாஸ் தேவையில்லை என அரசு அறிவிக்க வேண்டும் : டிடிவி தினகரன்

சென்னை : இ-பாஸ் நடைமுறையால் கல்லூரி சேர்க்கை பணிகளுக்காக செல்லும் மாணவர்கள் சிரமம் அனுபவிக்கிறார்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 7வது கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.ஊரடங்கு விதிகளின்படி, தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பதற்கு தனியார் வாகனங்கள் இ- பாஸ் பெறுவது கட்டாயம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவசர தேவைக்காக பாஸ் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு இ - பாஸ் கிடைப்பதில்லை என்றும் அதே சமயம்,சில ஏஜெண்டுகளிடம் 3000 ரூபாய் பணம் கொடுத்தால் அரை மணி நேரத்தில் பாஸ் தயாராகி விடுவதாகவும்  புகார்கள் எழுகின்றன. இந்த புகார்களை தொடர்ந்து இ - பாஸ் நடைமுறையை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கல்லூரி சேர்க்கை தொடர்பான பணிகளுக்காக தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு  மாவட்டத்திற்கு செல்வதற்கும், சென்னைக்கு வருவதற்கும்  மாணவர்களும்  அவர்களது பெற்றோர்களும் தற்போதுள்ள இ- பாஸ் நடைமுறையால் மிகுந்த சிரமத்தை அனுபவிக்கிறார்கள். இதற்காக இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்த பலரின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதால்,அவர்கள் கல்லூரியில் சேர்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றை காட்டினாலே போதும்; மாணவருக்கும், அவருடன் வருபவருக்கும் இ-பாஸ் தேவையில்லை என தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடைய பிரச்னையில் அரசு இனியும் காலதாமதம் செய்வதோ; அலட்சியம் காட்டுவதோ கூடாது, எனத் தெரிவித்துள்ளார். 


Tags : Government , Students going for college admission assignments only need to show a mark certificate; Government should declare e-pass not required: DTV Dinakaran
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...