மகாராஷ்டிர காவல்துறையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 147 போலீசாருக்கு கொரோனா; களப் பணியாளர்கள் அதிர்ச்சி...!!!

மும்பை: மகாராஷ்டிர காவல்துறையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 147 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் களப்பணியாற்றி வரும் போலீசார் தொடர்ந்து இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மகாராஷ்டிர காவல்துறையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 147 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 11,920 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் 9,569 பேர் குணமடைந்த நிலையில் 2,227 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனாவால் மகாராஷ்டிராவில் 124 போலீசார் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 11,920 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் 9,569 பேர் குணமடைந்த நிலையில் 2,227 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனாவால் மகாராஷ்டிராவில் 124 போலீசார் உயிரிழந்துள்ளனர்.

Related Stories:

>