×

இன்ஸ்பெக்டர் போலீஸ்காரர் ஜாமீன் மனு தள்ளுபடி

மதுரை: சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், போலீஸ்காரர் வெயில்முத்து உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீஸ்காரர் வெயில்முத்து ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் கோர்ட்டில் நீதிபதி தாண்டவன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ தரப்பில் வழக்கறிஞர் விஜயன் செல்வராஜ் “விசாரணை தொடரும் நிலையில், இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளது. எனவே ஜாமீன் வழங்கக் கூடாது” என காணொலியில் வாதிட்டார். அதன்படி இருவருடைய ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Inspector ,policeman , Inspector, policeman, bail petition, dismissal
× RELATED இன்ஸ்பெக்டர் உள்பட 8 போலீசாருக்கு கொரோனா