×

ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளருக்கு கொரோனா

ஐபிஎல் தொடரில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்  பீல்டிங் பயிற்சியாளர் திஷாந்த் யாக்னிக் (37). யுஏஇ செல்லும் அணியுடன் இணைவதற்கு முன்பாக, சொந்த ஊரான உதய்பூரில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். சோதனை முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. திஷாந்த் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளதாகவும், தன்னுடன் கடந்த 10நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படியும் கூறியுள்ளார். அவரை மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. யுஏஇ செல்வதற்கு முன்பு மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்யப்படும்.

Tags : coach ,Corona ,Rajasthan Royals , Rajasthan Royals, to coach, Corona
× RELATED ஐபிஎல் டி20: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு...