×

தனியார் ரயில் தாமதமானால் அபராதம்: வரைவு அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: தனியார் ரயில்கள் குறித்த நேரத்துக்கு முன்பாகவோ, தாமதமாகவோ வந்தால் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரயில்வேயில் தனியார் மயத்தை கொண்டுவரும் வகையில், தனியார் ரயில்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்தது. தனியார் ரயில்களை இயக்க நிறு வனங்கள் விண்ணப்பிப்பதற்கு முந்தைய 2வது மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. அதோடு, தனியார் ரயில்களை இயக்குவது தொடர்பான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
* தனியார் ரயில்கள் 95% நேரம் தவறாமையை கடைப்பிடிக்க வேண்டும்.
* ரயில்கள் குறித்த நேரத்துக்கு 10 நிமிடம் முன்பாகவோ, 15 நிமிடம் தாமதமாகவோ வந்தால் அபராதம் விதிக்கப்படும்.
* நேரம் தவறாமையில் ஒவ்வொரு ஒரு சதவீதம் குறையும்போதும், 200 கிலோ மீட்டருக்கான பயன்பாட்டு கட்டணத்தை கூடுதலாக செலுத்த வேண்டிவரும்.
* ரயில்வே கட்டமைப்பை பயன்படுத்துவதற்கு தனியார் ரயில்கள் பயன்பாட்டு கட்டணமாக கிலோ மீட்டருக்கு ரூ.512 வசூலிக்கப்படும்.
* ரயில்வேயால் ரயில் தாமதமானால், ரயில்வே தனியார் நிறுவனத்துக்கு கட்டணம் வழங்கும்.
* ரயில் ரத்து செய்யப்பட்டால், பயன்பாட்டு கட்டணத்தில் நான்கில் ஒரு பகுதியை நிறுவனங்கள் செலுத்த வேண்டும். ரத்துக்கு ரயில்வே காரணமானால், அதே கட்டணத்தை ரயில்வே தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும்.
இவ்வாறு அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : train delay , Private, train delay, fines, draft report, information
× RELATED தேஜாஸ் ரயில் தாமதம் 1.62 லட்சம் இழப்பீடு