×

பெங்களூரு கலவரம் குறித்து விசாரிக்க 4 குழு அமைத்தது கர்நாடகா அரசு: வன்முறையில் ஈடுபட்ட அமைப்புக்கு தடை?

பெங்களூரு: பெங்களூரு கலவரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக, துணை போலீஸ் கமிஷனர்கள் தலைமையில் கர்நாடகா அரசு 4 தனிக்குழு அமைத்துள்ளது. பெங்களூரு மாநகர மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கும் வகையில் புலிகேசிநகர் சட்டபேரவை தொகுதிக்கு உட்பட்ட தேவர்ஜீவனஹள்ளி, காடுகொண்டனஹள்ளி மற்றும் காவல்பைரசந்திரா பகுதியில் கடந்த 11ம் தேதி இரவு காங்கிரஸ் எம்எல்ஏ அகண்ட சீனிவாசமூர்த்தியின் வீடு, அவரது சகோதரி வீடுகளின் மீது தாக்குதல் நடத்திய கும்பல், தேவர்ஜீவனஹள்ளி மற்றும் காடுகொண்டனஹள்ளி போலீஸ் நிலையங்களையும் சூறையாடியது. போலீஸ் வேன், கார், ஜீப் உள்பட 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. கலவரத்தை ஒடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வாஜித்கான், யாஷின்பாஷா உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

இதனிடையில், வன்முறையில் ஈடுபட்ட அமைப்பின் நிர்வாகி முஜாமில் பாஷா, சையத் மசூத், ஆயோஜிகான், அல்லாபிச்சை உள்பட 17 பேர் மீது தேவர்ஜீவனஹள்ளி போலீசார் 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அவர்களுடன்  இதுவரை 190 பேர் கைது செய்துள்ளனர். அவர்களை காணொலி மூலமாக நீதிபதியின் முன் ஆஜர்படுத்திய போலீசார், சிறையில் அடைத்தனர். இதனிடையே, கலவரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக பெங்களூரு மாஜிஸ்திரேட் நீதிமன்ற  நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க, கர்நாடகா முதல்வர் எடியூரப்பா முடிவு செய்துள்ளார். இதற்கு உதவும் வகையில், கலவரம் தொடர்பாக விசாரித்து, ஆதாரங்களை வழங்குவதற்காக துணை போலீஸ் கமிஷனர்கள் தலைமையில் 4 குழுக்களை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

* சர்வதேச சதி காரணமா?
சமூகவலைத்தள பதிவை காரணமாக வைத்து, பெரியளவில் கலவரம் ஏற்படுத்தி அதன் மூலம் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் சர்வதேச அளவில் இயங்கி வரும் தீவிரவாதிகளின் கை வரிசை பெங்களூரு சம்பவத்தில் இருக்குமா? என்ற சந்தேகம் கர்நாடகா போலீசுக்கு ஏற்பட்டுள்ளது. இது பற்றி மத்திய உளவுத்துறை உதவியுடன் மாநில உளவுதுறையினர் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : organization ,panel ,Government ,Karnataka ,Bangalore , Bangalore riots, probe, 4 panel, Karnataka government, violence, ban on organization?
× RELATED டெல்லி ஜே.என்.யு. பல்கலை. மாணவர் அமைப்பு...