×

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரனுக்கு கொரோனா தொற்று உறுதி...!!!

வேலூர்: வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 5,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 5,146 சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 61 ஆயிரத்து 459 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது.

இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு களப்பணியில் உள்ளவர்களுக்கு தொற்று ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் உள்பட 20- க்கும் மேற்பட்ட எம்.எல். ஏ. க்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது, வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டப்போறியாளர் சீனிவாசனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : Corona ,Sankaran ,Vellore Corporation ,Commissioner , Vellore Corporation Commissioner, Corona Infection
× RELATED நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி