×

காமராஜ் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜான்குமார் 16303 வாக்குகளும், 384 தபால் வாக்குகளும் பெற்று வெற்றி

புதுச்சேரி: காமராஜ் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜான்குமார் 16303 வாக்குகளும், 384 தபால் வாக்குகளும் பெற்றுள்ளார். புதுவை சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க. ஒரு அணியாகவும், காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு ஒரு அணியாகவும் போட்டியிட்டது.  இதுதவிர அ.ம.மு.க., மக்கள்நீதிமய்யம், நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க. சுயேச்சைகள் என 30 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 324 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் என்ஆர்.காங்கிரஸ் 16, பா.ஜனதா 9, அ.தி.மு.க. 5 தொகுதிகளில் போட்டியிட்டது. 
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் 15, தி.மு.க. 13, இந்தியகம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் தலா ஒரு தொகுதியில் போட்டியிட்டது. இந்நிலையில் காமராஜ் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜான்குமார் 16303 வாக்குகளும், 384 தபால் வாக்குகளும் பெற்றுள்ளார். எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஷாஜகான் 9208 வாக்குகளும், 250 தபால் வாக்குகளும் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஷாஜகானை விட 7229 வாக்குகள் கூடுதலாக பெற்று பாஜக வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றுள்ளார்.

The post காமராஜ் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜான்குமார் 16303 வாக்குகளும், 384 தபால் வாக்குகளும் பெற்று வெற்றி appeared first on Dinakaran.

Tags : Kamaraj Nagar constituency ,BJP ,Jankumar ,Puducherry ,Kamaraj Nagar ,Puduwai Assembly ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...