×

தஞ்சையில் புகழ்பெற்ற சரஸ்வதி மகால் நூலகத்தில் அரிய வரை நூல்கள், ஓலைச்சுவடிகள் திருட்டு? : மீட்டுத்தர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!!!

தஞ்சை:  தஞ்சையில் புகழ்பெற்ற சரஸ்வதி மகால் நூலகத்திலிருந்து பழமை வாய்ந்த அரிய வகை நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகள் காணாமல் போயுள்ளன. இதனால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சரஸ்வதி மகால் சுமார் 617 ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சை மராட்டிய அரகர்களால் உருவாக்கப்பட்டுள்ளதாக கல்வெட்டு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து இந்த நூலகத்தில் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இடாய்ச்சு, இலத்தீன், கிரேக்கம் முதலிய பலமொழிகளிலுள்ள ஓலைச்சுவடிகளும், கையெழுத்துப்பிரதிகளும், அச்சுப்பிரதிகளும் இடம்பெற்றுள்ளன.

மேலும் இதனைத்தொடர்ந்து வரலாறு, மருத்துவம், அறிவியல், இசை, நாட்டியம், சிற்பம், மதம், தத்துவம் முதலிய பல கலைகளில் சிறந்த நூல்களும் இடம்பெற்றிருந்தன. இத்தனை பழமைவாய்ந்த நூல்களை கொண்ட இந்த நூகலத்திலிருந்து தற்போது 700க்கும் மேற்பட்ட அரிய வகை நூல்களும், ஓலைச்சுவடிகளும் மாயமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வரலாற்று நூல்களை வெளியே கொண்டு சென்றதற்கான பதிவுகள் இருக்கும் நிலையில் அவை திரும்ப வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சுமார் 700க்கும் மேற்பட்ட நூல்கள் மாயமாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் நூலகத்திற்கு தனி அலுவலரை நியமனம் செய்யாததே நூல்கள் மாயமானதற்கு முக்கிய காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் கடந்த 2005ம் ஆண்டு மாயமான முதல் பைபுலின் முதல் பாகமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என கூறியுள்ளனர். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு மாயமான நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் தொடர் கோரிக்கையாக உள்ளது.

Tags : Theft ,activists ,Saraswati Mahal Library ,Thanjavur , Theft of rare books and manuscripts in the famous Saraswati Mahal Library in Thanjavur? : Social activists demand redemption !!!
× RELATED கோவில்பட்டியில் இந்தியா கூட்டணி...