×

குற்றாலத்தில் யானை மிதித்து உயிரிழந்த வனத்தடுப்பு காவலர் முத்துராஜின் உடல் மீட்பு!!!

தென்காசி:  குற்றாலம் அருகே காட்டுயானை மிதித்து உயிரிழந்த வனத்தடுப்பு காவலர் முத்துராஜின் உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் மெயினருவியிலிருந்து ஐந்தருவிக்கு செல்லும் சாலையில் வனச்சரக அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் பிரிஞ்சான்பாறை என்ற இடத்தில் நேற்று முன்தினம் காட்டுயானை ஒன்று சுற்றித்திரிந்து. இதனையடுத்து தகவலறிந்து வேட்டை தடுப்பு ஊழியர்கள் சிலர் அங்கு சென்றுள்ளனர். பின்னர் யானையை விரட்டியடிக்க அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த முயற்சியின்போது 57 வயதுடைய வனத்தடுப்பு காவலர் முத்துராஜி என்பவர் சம்பவ இடத்திலேயே காட்டுயானை மிதித்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மற்ற அதிகாரிகளிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பின்னர் காவலரை கொன்ற காட்டுயானை, உடலை மீட்க முடியாத வண்ணம் அதனையே சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தது. இதனால் உடலை மீட்பதில் சிக்கல் நிலவி வந்தது.  இதனையடுத்து அனைத்து வனத்தடுப்பு காவலர்களும் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். இதையடுத்து முத்துராஜின் உறவினர்கள் வனத்தடுப்பு அதிகாரிகளிடம் நாங்கள் சென்று உடலை கைப்பற்றி கொள்கிறோம் என கூறியுள்ளனர். அதற்கு அனுமதி தருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆனால் யானைகள் அதிகளவில் அங்கு வருவதற்கான வாய்ப்பிருப்பதால் வனத்துறை அதிகாரிகள் உறவினர்களை அனுப்ப மறுத்துவிட்டனர். பின்னர் வனத்துறை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர் அங்கேயே முகாமிட்டு யானையின் செயலை கண்காணித்து வந்தனர். நேற்று இரவு சுமார் 12 மணி வரை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து இன்று காலை 35 பேர் கொண்ட குழு முத்துராஜின் உடலை மீட்டு, தென்காசி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Courtallam ,Muthuraj , Muthuraj's body rescued after trampling elephant in Courtallam
× RELATED கன்னியாகுமரி அருகே விவசாயி கொலை வழக்கு: 5 பேருக்கு ஆயுள் தண்டனை