×

இறுதி கட்டமாக சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு அமோனியம் நைட்ரேட் 15 லாரியில் சென்றது: மணலி சுற்றுவட்டார பகுதி மக்கள் நிம்மதி

சென்னை: அமோனியம் நைட்ரேட் 740 டன் செப்டம்பர் 2015ம் ஆண்டு ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்டது. அது மணலி பொன்னேரி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் சரக்குப் பெட்டகத்தில் 5 ஆண்டுகளாக 37 கன்டெய்னரில் பாதுகாப்பாக வைத்தனர். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை லெபனான் நாட்டின் பெய்ரூட்டில் அமோனியம் நைட்ரேட் இருப்பு வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தால் அதிர்ச்சி அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் மணலியில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அமோனியம் நைட்ரேட் ரசாயனத்தை ஆய்வு செய்தனர். அப்போது, 697 டன் எடை கொண்ட அமோனியம் நைட்ரேட் ரசாயனம் அங்கு பாதுகாப்புடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த ரசாயனத்தை ஏலம் எடுத்த ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டனர்.

இரு தினங்களுக்கு முன்பு முதற்கட்டமாக 181 டன் எடை கொண்ட அமோனியம் நைட்ரேட் ரசாயனம் அடைக்கப்பட்ட 10 கன்டெய்னர் பெட்டிகள் ஐதராபாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக நேற்று முன்தினம் 229 டன் எடை கொண்ட அமோனியம் நைட்ரேட் ரசாயனம் அடைக்கப்பட்ட 12 பெட்டிகள் ஹைதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையில், இறுதியாக 287 டன் எடைகொண்ட அமோனியம் நைட்ரேட் ரசாயனம் அடைக்கப்பட்ட 15 கன்டெய்னர் பெட்டிகள் லாரிகள் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் கடந்த 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டு சுற்று வட்டாரத்திலுள்ள பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய அமோனியம் நைட்ரேட் ரசாயனம் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Chennai ,Hyderabad ,area ,Manali , As a final step, 15 lorries went to Chennai, Hyderabad, Ammonium Nitrate, People's Relief
× RELATED தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து..!!