×

கிரானைட் குவாரி வழக்கில் பி.ஆர்.பழனிசாமியை விடுவித்த மேலூர் நீதிமன்ற உத்தரவு ரத்து

மதுரை: கிரானைட் குவாரி மோசடி வழக்கில் இருந்து பி.ஆர்.பழனிசாமி மற்றும் பங்குதாரர்களை கடந்த 2016ம் ஆண்டு மேலூர் நீதிமன்ற விடுவித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்து மேலூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில், ‘‘வழக்கு தொடர்பாக அப்போதைய மதுரை கலெக்டர் அன்சுல்மிஸ்ரா, மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் 2 மாதத்திற்குள் நேரில் ஆஜராக வேண்டும். அன்சுல்மிஸ்ரா ஆஜராகிய நாளிலிருந்து 2 மாதங்களில் 2 தரப்பு வாதங்களையும் கேட்டு, சிறப்பு நீதிமன்றம் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும்’’ என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Tags : Melur ,BR Palanisamy , In the Granite Quarry case, B.R. Palanisamy, acquitted Melur Court, quashed
× RELATED 108 ஆம்புலன்ஸ் வர தாமதம்...