×

பெண்களுக்கு சொத்துரிமை ஜி.கே.வாசன் வரவேற்பு

சென்னை: பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பரம்பரை குடும்ப சொத்தில் ஆண்களுக்கு உரிமை உள்ளது போல் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பெண்கள் சொத்துரிமை சம்பந்தமான சந்தேகங்களுக்கு, தெளிவு ஏற்படுத்தக் கூடிய தீர்ப்பாக, இத்தீர்ப்பு அமைந்திருக்கிறது. இது பெண்கள் முன்னேற்றத்திற்கும், பாதுகாப்பிற்கும் வழி வகுக்கும். இத்தீர்ப்பை த.மா.கா வரவேற்கிறது.

Tags : Women GK Vasan Welcome , Woman, Property, GK Vasan, Welcome
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...