×

ஐபிஎஸ் அதிகாரிகள் 9 பேர் பணியிடமாற்றம்: உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவு

சென்னை: சாத்தான்குளம் சம்பவத்தால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி உட்பட 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இரண்டு வியாபாரிகளை விசாரணைக்கு அழைத்து சென்றபோது உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைதொடர்ந்து அப்போது தூத்துக்குடி கண்காணிப்பாளராக இருந்த அருண் பாலகோபாலன் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். நீண்ட நாட்களுக்கு பிறகு அருண் பாலகோபாலனுக்கு மீண்டும் தமிழக அரசு பதவி வழங்கி உள்ளது.

இதுகுறித்து உள்துறை செயலாளர் பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் பாலகோபாலன் சென்னை சைபர் பிரிவு II  கண்காணிப்பாளராகவும், சென்னை சைபர் பிரிவு IIல் இருந்த ஓம் பிரகாஷ் மீனா சென்னை நிர்வாக பிரிவு ஏ.ஐ.ஜியாகவும், சென்னை நிர்வாக பிரிவு ஏ.ஐ.ஜியாக இருந்த சிபி சக்ரவர்த்தி சென்னை சைபர் செல், சிபிசிஐடி கண்காணிப்பாளராகவும், சென்னை சைபர் செல், சிபிசிஐடி கண்காணிப்பாளராக இருந்த ஜெயலட்சுமி வண்டலூர் தமிழ்நாடு போலீஸ் அகாடமி கண்காணிப்பாளராகவும், வண்டலூர், தமிழ்நாடு போலீஸ் அகாடமி கண்காணிப்பாளராக இருந்த ஜெயச்சந்திரன் சென்னை, தமிழ்நாடு கமாண்டோ பிரிவு கண்காணிப்பாளராகவும், சென்னை, தமிழ்நாடு கமாண்டோ பிரிவு கண்காணிப்பாளராக இருந்த ஷியாமலா தேவி சென்னை நில அபகரிப்பு சிறப்பு பிரிவு கண்காணிப்பாளராகவும், சென்னை நில அபகரிப்பு சிறப்பு பிரிவு கண்காணிப்பாளராக இருந்த கண்ணம்மாள் சென்னை மத்திய குற்றப்பிரிவு II துணை கமிஷனராகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு II துணை கமிஷனராக இருந்த தீபா சத்யன் சென்னை அம்பத்தூர் துணை கமிஷனராகவும், சென்னை அம்பத்தூர் துணை கமிஷனராக இருந்த நிஷா சென்னை சைபர் குற்றப்பிரிவு கண்காணிப்பாளராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Tags : IPS officers ,Prabhakar , IPS officers, 9 persons, transfer, Home Secretary Prabhakar
× RELATED “மீண்டும் மோடி வென்றால் நாடே...