×

ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மாற்றம் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது: தீபக் வழக்கில் ஐகோர்ட்டில் அரசு வாதம்

சென்னை:  மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா நிலையத்தை அவரது நினைவு இல்லமாக மாற்றுவதற்காக தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 24 ஆயிரம் சதுர அடி பரப்பு கொண்ட வேதா நிலையம் அமைந்துள்ள இடத்துக்கு ரூ.68 கோடி இழப்பீடு நிர்ணயித்து நிலம் கையகப்படுத்தும் அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின்படி, ரூ.68 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தி, வேதா நிலையம் இல்லத்தை அரசுடைமையாக்கி தமிழக அரச அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், வேதா நிலையத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை எதிர்த்தும், இழப்பீடு நிர்ணயித்த உத்தரவை எதிர்த்தும் ஜெயலலிதாவின் சட்ட பூர்வ வாரிசுகளான தீபக் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், வேதா நிலையத்தை கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, நினைவில்லம் அமைப்பது அரசின் கொள்கை முடிவு என்றார். அப்போது, ஏற்கனவே இதே கோரிக்கைகளுடன் தீபா தாக்கல் செய்த மனு பட்டியலிடப்படவில்லை என்று நீதிபதிகளிடம் தீபா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இருவழக்குகளையும் சேர்த்து விசாரிக்கலாம் என உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Tags : Transformation ,house ,memorial ,government ,Deepak ,I-Court ,Jayalalithaa , Jayalalithaa's house converted into a memorial, government policy, can not interfere, Deepak case, iCourt, government argument
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...