×

லாரி மோதியதில் ஒருவர் பலி

பூந்தமல்லி: திருவள்ளூர் அருகேயுள்ள புட்லூர் பகுதியை சேர்ந்தவர் சுமன்(40), இவர் நேற்று மதுரவாயலில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக பைக்கில் சென்றார்.  பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை சிக்னலில் பைக்கில் நின்று கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியது. இதில் சுமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து லாரி டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பூந்தமல்லி போக்குவரத்து போலீசார், தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags : Larry Moti, one, killed
× RELATED விருத்தாச்சலம் அருகே கார் மீது மீன்...