×

மலைச்சாலையில் சரியும் நிலையில் ராட்சத பாறைகள்: அதிகாரிகள் கவனிப்பார்களா?

பட்டிவீரன்பட்டி: சித்தரேவு-பெரும்பாறை மலைச்சாலையில் சரிந்து விழும் நிலையில் உள்ள ராட்சத பாறைகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில், சித்தரேவு-பெரும்பாறை மலைச்சாலை 15 கிமீ தூரம் கொண்டது. மிகவும் குறுகலான இந்த சாலையில் பல அபாயகரமான வளைவுகளும், சாலையோரத்தில் ஆபத்தான பள்ளத்தாக்குகளும் உள்ளன. இந்த மலைச்சாலையை விரிவுபடுத்த பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையையேற்று கடந்தாண்டு ரூ.6 கோடியே 50 லட்சம் செலவில் இச்சாலையை விரிவுபடுத்தும் பணி துவங்கியது. மலையடிவாரத்திலிருந்து 8 கிமீ தொலைவில்,  3 ராட்சத பாறைகள் மலைச்சாலையில் சரிந்து விழும் நிலையில் உள்ளன. பாறைகள் சரிந்து விழுந்தால், பெரும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் உயிரிழக்கும்  நிலை உள்ளது. எனவே இந்த ராட்சத பாறைகளை உடனடியாக அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது

Tags : mountain road , Mountain road, giant rocks
× RELATED தடுப்பு சுவர்களும் சாய்ந்து ஆபத்தாக...