×

கொரோனா ஊரடங்கால் வாங்க ஆள் இல்லாததால்; குறைந்த விலைக்கு ஏலம் போகும் வாழைத்தார்கள்

கரூர்: கொரோனா ஊரடங்கு காரணமாக வாங்க ஆளில்லாத காரணத்தினால் வாழைத்தார் ரகங்கள் குறைந்த விலைக்கே ஏலம் விடப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 24ம்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஊரடங்கு காரணமாக அனைத்து தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கரூர் ரயில் நிலையம் செல்லும் வழியில் வாழைத்தார் கமிஷன் மண்டி செயல்படுகிறது. இங்கு கரூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகளால் கொண்டு வரப்படும் வாழைத்தார்கள் தேவைக்கேற்பவும், வரத்துக்கு ஏற்பவும் ஏலம் விடப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் ஆடி மாதம் வாழைத்தார்கள் அதிகளவு ஏலம் விடப்பட்டு வந்தது. தற்போது கொரோனா காரணமாக கோயில்கள் திறப்பு இல்லை என்பதால் வாழைத்தார்களின் தேவையும் மிகவும் குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக கரூர் வாழைத்தார் கமிஷன் மண்டியில் பூவன் ரூ. 250, ரஸ்தாளி ரூ. 300, கற்பூரவள்ளி ரூ. 300, பச்சநாடான் ரூ. 300 என்ற அளவில்தான் ஏலம் விடப்பட்டு வருகிறது. ஒரு சில வியாபாரிகள் மட்டுமே ஏலம் எடுத்து செல்கின்றனர். கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகுதான் அனைத்தும் சகஜ நிலைக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Corona, curfew, auction, lived
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...