×

உள்நாட்டு உற்பத்தி விகிதம் மிகப்பெரிய அளவில் சரிவு!: மோடியால் எல்லாம் சாத்தியம் என்று கருத்து பதிவிட்டு ராகுல் காந்தி கிண்டல்..!!

டெல்லி: நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் மிகப்பெரிய அளவில் சரிந்திருப்பது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி இருக்கும் இடத்தில் எல்லாம் சாத்தியமே என்று கூறியுள்ளார். நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் மிகப்பெரிய அளவில் சரிந்து சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் இருந்த நிலைக்கு பின்னோக்கி சென்றுள்ளதாக இன்ஃபோசிஸ் ஐ.டி. நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தி சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு மக்கள் கொரோனாவோடு வாழ பழகி கொண்டு ஒவ்வொரு துறையிலும் சிறந்த பங்களிப்பை வழங்கினால் மட்டுமே சாத்தியம் என்று அவர் கூறியிருந்தார். இந்நிலையில், இன்ஃபோசிஸ் ஐ.டி. நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தியின் எச்சரிக்கையை சுட்டிக்காட்டி ட்விட்டரில் ராகுல் காந்தி, பாரதிய ஜனதா கட்சி கடந்த ஆண்டு தேர்தலில் முன்வைத்த மோடி இருந்தால் எல்லாமே சாத்தியம் என்ற முழக்கத்தை பதிவிட்டுள்ளார்.

அதோடு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்  குறித்த நாராயணமூர்த்தியின் எச்சரிக்கையையும் ராகுல் காந்தி அதில் இடம்பெற செய்துள்ளார். எல்லையில் சீன ஆக்கிரமிப்பு குறித்து பிரதமரை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்த வந்த ராகுல் காந்தி, இம்முறை நாட்டின் பொருளாதார சரிவு குறித்து கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Rahul Gandhi ,Modi , GDP , Rahul ,Modi ,
× RELATED ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை...